என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சீன அதிபர்
நீங்கள் தேடியது "சீன அதிபர்"
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், “சீன அதிபருடன் நீண்ட நேரம் நடந்த உரையாடல் சிறப்பானதாக அமைந்தது. வர்த்தக முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசினோம். ஜி20 மாநாட்டின்போது நடைபெற உள்ள சந்திப்பு தொடர்பாக பேசினோம். வடகொரியா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் ஜி20 மாநாட்டின் இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் டிரம்ப், ஜி ஜின்பிங் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWarUSChinaTrade #Trump #XiJinping

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், “சீன அதிபருடன் நீண்ட நேரம் நடந்த உரையாடல் சிறப்பானதாக அமைந்தது. வர்த்தக முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசினோம். ஜி20 மாநாட்டின்போது நடைபெற உள்ள சந்திப்பு தொடர்பாக பேசினோம். வடகொரியா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் ஜி20 மாநாட்டின் இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் டிரம்ப், ஜி ஜின்பிங் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். #ImranKhan #ImranKhanChinavisit
இஸ்லாமாபாத்:
வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.
பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். சினா-பாகிஸ்தான் இடையிலான ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இந்த பயணத்தின்போது சீன அதிபர் க்சி கின்பிங் உடன் இம்ரான் கான் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியை நவம்பர் 5-ம் தேதி இம்ரான் கான் பார்வையிடுவார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #ImranKhan #ImranKhanChinavisit
இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை சீன அதிபர் ஜின்பிங் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். #SCOSummit #XiJinping #Modi
கிங்தாவோ:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.
இந்த தகவலை பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இரு தலைவர்களும் இந்தியாவில் எந்த தேதியில் சந்தித்து பேசுவது என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார். #SCOSummit #XiJinping #Modi

×

X